தக்காளி கார அடை...

 தக்காளி கார அடை செய்ய தேவையான பொருட்கள்:

அரைக்க  :
தக்காளி                               -       அரை கிலோ
புழுங்கல் அரிசி                 -       அரை கிலோ
பட்டை மிளகாய்                -        5 அல்லது 6
உப்பு                                      -      தேவையானது

தாளிக்க:
கடுகு                                     -       சிறிதளவு
கடலை பருப்பு                    -       சிறிதளவு
கறிவேப்பிலை                   -      சிறிதளவு
பச்சை கொத்த மல்லி      -      சிறிதளவு
வெங்காயம்                        -      கால் கிலோ 

செய்முறை:

புழுங்கல் அரிசியை நன்கு களைந்து  ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை, கொத்த மல்லி சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
அரிசி நன்கு  ஊறிய பின்  அதனுடன் தக்காளி மற்றும் பட்டை மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர் மாவுடன் வதக்கிய கலவை, கறிவேப்பிலை, பச்சை கொத்த மல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
தோசை கல்லில் முறுவலான தோசை போல் எண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும். தக்காளி கார அடை ரெடி .