Puttu புட்டு...

Puttu புட்டு

புட்டு செய்ய தேவையான பொருட்கள். 
  1. புட்டு மாவு                  -   1 கப் 
  2. (புட்டு மாவு  என்பது இடியாப்ப மாவு) 
  3. கடலைப் பருப்பு        -   அரை கப் 
  4. வெல்லம்                     -   1 கப் 
  5. தேங்காய்                    -   1 கப் 
  6. ஏலக்காய்                     - சிறிதளவு 
  7. உப்பு                              - தேவையான அளவு 

செய்முறை:  
பூர்ணம்: 
கடலைப் பருப்பை  ஊற வைக்கவும்.  கடலை பருப்பு  ஒரு மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊறிய பின் நன்கு வேக வைக்கவும். 
வேக வைத்த கடலை பருப்பை தண்ணீர் வடித்து எடுத்து மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். 
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 
வெல்ல பாகுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.
அதனுடன் மசித்து வைத்த கடலை பருப்பை சேர்த்து நன்கு கிளறவும். 
ஏலக்காய் பொடி செய்து அதில் சேர்த்து நன்கு கிளறவும். 
பூர்ணம் கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். 

புட்டு மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொண்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கிளறவும். 
மாவும் சிறு சிறு கட்டிகளாகவும் கிளறவும்.  தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. 
இந்த கிளறிய மாவை இட்லி தட்டில் வைத்து வேக வைத்து எடுக்கவும். 
வேக வைத்த மாவு ஆறியதும் பூர்ணம் சேர்த்து நன்கு கிளறவும்.
சுவையான புட்டு ரெடி.