Potato fry recipe in tamil language...

தேவையான பொருட்கள்  :

  1. உருளைக்கிழங்கு     -  1 கப் 
  2. வெங்காயம்                 -  கால் கப் 
  3. பச்சை மிளகாய்          -  2 
  4. தேங்காய் துருவல்     -   கால் கப் 
  5. எண்ணெய்                  -  தேவையான அளவு 
  6. கடுகு                              -  சிறிதளவு 
  7. கடலை பருப்பு             -  சிறிதளவு 
  8. கறிவேப்பிலை           -  சிறிதளவு 

செய்முறை  :

  • உருளைக்கிழங்கை வேக வைத்து எடுக்கவும். 
  • பின்னர் உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்து எடுத்துக் கொள்ளவும். 
  • பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 
  • ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் அதனுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும். 
  • பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறவும். 
  • உருளைக்கிழங்கு மசியல் ரெடி.