Onion coconut Chutney ...

கார தேங்காய் சட்னி

தேவையான பொருட்கள்  :
தேங்காய் துருவல்     - அரை கப்
பட்டை மிளகாய்          -  5 அல்லது 6
சின்ன வெங்காயம்    - 4 அல்லது 5
கடலைப்பருப்பு            -  சிறிதளவு
உப்பு                                - தேவையான அளவு
புளி                                  - சிறிதளவு
எண்ணெய்                   - தேவையான அளவு
கடுகு                               -  தாளிக்க
கறிவேப்பிலை             -  தாளிக்க

செய்முறை  :
ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி பட்டை மிளகாய் மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக வதக்கி எடுக்கவும்.
தேங்காய் துருவல், சின்ன வெங்காயம்,  உப்பு,  புளி மற்றும் வதக்கிய பட்டை மிளகாய், கடலை பருப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
சுவையான கார தேங்காய் சட்னி ரெடி.

Topics List - Recipe