வெங்காய சட்னி - Onion chutney...

வெங்காய சட்னி - Onion chutney

தேவையான பொருட்கள்: 

 1. சின்ன வெங்காயம்    -   அரை கப் 
 2. பட்டை மிளகாய்           -   7அல்லது 8
 3. தக்காளி                          -   1
 4. கடலைப் பருப்பு            -  1 டீஸ்பூன் 
 5. பெருங்காயம்                -   சிறிதளவு 
 6. உப்பு                                 - தேவையான அளவு 
 7. எண்ணெய்                     -  தேவையான அளவு 
 8. கடுகு                                -  சிறிதளவு 
 9. கறிவேப்பிலை             -  தேவையான அளவு 

செய்முறை  : 

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி ஒன்று இரண்டாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். 
தக்காளியையும் நறுக்கி வைக்கவும். 
ஒரு சட்டியில் சிறிதளவு  எண்ணெயை ஊற்றி பட்டை மிளகாய், பெருங்காயம் மற்றும் கடலை பருப்பை தனித்தனியாக வறுத்து எடுக்கவும். 
நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியையும் எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கவும். 
வதக்கிய பொருட்களை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். 
பின்னர் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். 
சுவையான வெங்காய சட்னி ரெடி. 


Onion chutney :

Ingredients for onion Chutney  : 

 1. Small onion                   -   half cup 
 2. Red chills                        -   7 or 8
 3. Tomato                           -   1
 4. Bengal gram dal            -  1 teaspoon  
 5. Asafoetida                     -   required  
 6. Salt                                    - required 
 7. Oil                                     -  required  
 8. Mustard                          -  required  
 9. Curry leaves                   -  required 

Process  : 

Take small onion remove the onion skin and cut them into two pieces.
Also slice the tomato. 
Take the following ingredients and roast the ingredients separately.  
Red chilli,  Bengal gram dal,  asafoetida, small onions and tomato. 
Take the roasted ingredients add required amount of salt and water grind well. 
Roast the mustard and curry leaves and add the grinding mixture. 
Tasty onion Chutney ready.