Cauliflower pakkoda...

காலிஃபிளவர் பக்கோடா
தேவையான பொருட்கள்  :
காலிஃபிளவர்              -  1 கப்
கடலை மாவு                  -  அரை கப்
பச்சரிசி மாவு                -  கால் கப்
எண்ணெய்                    -  தேவையான அளவு
மிளகாய் தூள்               -   தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
மஞ்சள் தூள்                  - சிறிதளவு
உப்பு                                  -  தேவையான அளவு
(சிவப்பு நிற அல்வா பவுடர் - தேவையென்றால் சேர்த்து கொள்ளவும். )
செய்முறை :
காலிஃபிளவரை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்த வெந்நீரில் காலிஃபிளவரை சிறிது நேரம் வேக வைக்கவும்.
காலிஃபிளவரை தண்ணீர் வடித்து ஆற வைக்கவும்.
காலிஃபிளவருடன் கடலை மாவு,  பச்சரிசி மாவு,  மிளகாய் தூள்,  இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையென்றால் கலர் பவுடர் சேர்த்து நன்கு கிளறவும்.
தேவையென்றால் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் காலிஃபிளவர் கலவையை பொன்நிறமாக பொறித்து எடுக்கவும்.
சுவையான காலிஃபிளவர் பக்கோடா ரெடி.

Topics List - Recipe