பாகற்காய் பட்லெட்...

பாகற்காய் பட்லெட்


Bitter gourd Patlet
பாகற்காய் பட்லெட் செய்ய தேவையான பொருட்கள் :
பாகற்காய்                           -    2
வெங்காயம்                        -    2
பச்சை மிளகாய்                -    2
மிளகாய் தூள்                   -     2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                      -     அரை டீஸ்பூன்         
தேங்காய்                             -   1 கப் 
உளுத்தம் பருப்பு               -   கால் கிலோ 
கடுகு                                     -   தாளிக்க 
கடலை பருப்பு                    -   தாளிக்க 
எண்ணெய்                        -  தேவையான அளவு 
கறிவேப்பிலை                 -  தேவையான அளவு 
உப்பு                                     - தேவையான அளவு 
அரைக்க  :
                 உளுத்தம் பருப்பை ஊற வைத்து நன்கு அரைத்து எடுக்கவும்.
                 தேங்காயை துருவி அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
செய்முறை  :
                  உளுத்தம் பருப்பை ஊற வைத்து நன்கு அரைத்து எடுக்கவும். 
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி கொள்ளவும். 
உளுந்து மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை,  உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.  
ஒரு சட்டியில் எண்ணெயை ஊற்றி சிறு சிறு உருண்டையாக பொறித்து எடுக்கவும். 
பாகற்காயை வட்ட வடிவில் நறுக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். 
பொறித்து எடுத்த  உருண்டையை சேர்க்கவும்.  அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். 
கடுகு,  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.  
பாகற்காய் பட்லெட் ரெடி.